ஹோம் /நியூஸ் /kanchipuram /

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அவதி..

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்.. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் அவதி..

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Kanchipuram District News : காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஏகனாம்பேட்டை ஊராட்சியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது‌.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஏகனாம்பேட்டை ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஏகனாம்பேட்டை ஊராட்சியில் புகழ்பெற்ற ராணியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலின் அருகே புதுப்பேட்டை செல்லும் சாலையை இணைக்கும் தார் சாலை ஒன்று உள்ளது.

இதன் வழியாகத்தான் நாள்தோறும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் திம்மையன் பேட்டை, புதுப்பேட்டை கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

இந்நிலையில், இந்த சாலையின் அருகாமையிலேயே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் திறந்த வெளியாக பல்வேறு பகுதிகளில் குட்டைகள் போல் தேங்கியுள்ளது.

இதையும் படிங்க : எலெக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து.. தீயில் எரிந்து நாசமான பைக்குகள்!

இந்த கழிவு நீர் சாலையில் ஓடுவதால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும் கிராம மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில் காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் இந்த தார் சாலையைதான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் காஞ்சிபுரம் சாலை வழியாக செல்லாமல் இந்த சாலையில் தான் செல்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சுகாதார சீர்கேடு மிக்க இந்த தார் சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீர் குட்டைகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பாதுகாப்பாக செப்டிக் டேங்க் எனப்படும் தொட்டி அமைத்து நீரைத் தேக்கி அப்புறப்படுத்த எந்தவித நடவடிக்கையும் வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொள்வதில்லை இதனால் இந்த வழியாக செல்லும் மக்கள் மட்டுமின்றி மாணவ மாணவிகளும் கழிவு நீரை மிதித்தவாறு செல்லும் அவல நிலை நாள்தோறும் நிலவுகிறது என தெரிவிக்கின்றனர்.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை இப்பகுதியில் தொற்று நோய் ஏற்படுத்தும் முக்கிய பகுதியாக விளங்கும் ராணியம்மன் கோவில் பின் தெரு பகுதியை ஆய்வு மேற்கொண்டு இப்பகுதியில் உள்ள கழிவுநீர் குட்டைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பகுதியிலிருந்து மக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் செய்தியாளர் : கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News