முகப்பு /செய்தி /kanchipuram / மாங்காடு அருகே கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன்... தகவல் தெரிவிக்காமல் மூடி மறைத்த நண்பர்கள்

மாங்காடு அருகே கல்குவாரி நீரில் மூழ்கிய சிறுவன்... தகவல் தெரிவிக்காமல் மூடி மறைத்த நண்பர்கள்

கல்குவாரியில் மூழ்கிய பள்ளி மாணவன் பலி

கல்குவாரியில் மூழ்கிய பள்ளி மாணவன் பலி

Mangadu | மாங்காடு அருகே கல்குவாரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார். அவருடன் வந்தவர்கள் இது குறித்து தகவல் சொல்லாமல் சென்றுள்ளனர். 

  • Last Updated :
  • Mangadu, India

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர், அணுகார்டன் பகுதியை சேர்ந்தவர் சத்யா(36), வடபழனியில் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பராக பணி செய்து வருகிறார். இவரது மகன் பிரசன்னா(15), கோவூரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிரசன்னா தனது நண்பர்களுடன் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க சென்றார். 

அவருக்கு நீச்சல் தெரியாததால் கரையில் அமர்ந்து குளித்துள்ளார். அப்போது திடீரென நீரில் மூழ்கி விட்டார். இதையடுத்து அவருடன் வந்த நண்பர்கள் இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டனர். இன்று காலை தனது மகனை காணவில்லை என அவரது நண்பர்களிடம் கேட்டபோது கல்குவாரியில் குளிக்கும் போது நீரில் மூழ்கி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து அதிர்ச்சி அடைந்த சத்யா மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு போலீசார் நீரில் மூழ்கிய பிரசன்னாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது சிறிது நேரத்திலேயே அவரது உடல் மீட்கப்பட்டது.

Also see... கரூரில் ஜோராக நடக்கும் கஞ்சா பிசினஸ்.. காவல் துறை அதிரடி

இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

top videos

    செய்தியாளர்: சோமசுந்தரம், மாங்காடு

    First published:

    Tags: Crime News, Death, Kancheepuram, School student