ஹோம் /நியூஸ் /kanchipuram /

கண்களை கவரும் மணல் கோயில்..! காஞ்சிபுரத்தில் அசத்திய கலைஞர்கள்...

கண்களை கவரும் மணல் கோயில்..! காஞ்சிபுரத்தில் அசத்திய கலைஞர்கள்...

மணல் கோயில்

மணல் கோயில்

Kanchipuram District News : காஞ்சியில் மனதை மயக்கும் மணல் கைலாசநாதர் கோவில்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் புத்தக திருவிழாவில் இடம் பெற்றுள்ள மணலால் வடிவமைக்கப்பட்ட புகழ்பெற்ற காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோவில் சிற்பம் புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்த அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி 'புத்தியை தீட்டுவோம்' என்ற வாசகத்தை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து 120 அரங்குகள், ஐம்பதாயிரம் தலைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கு மைதானத்தில் புத்தகத் திருவிழாவின் துவக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

மணல் கோயில்

இதையும் படிங்க : குன்றத்தூர் அருகே மாமுல் தர மறுத்த பல் டாக்டருக்கு அரிவாள் வெட்டு...

காஞ்சிபுரத்தில் முதல் முறையாக நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் பல்வேறு விதமான அம்சங்களுடன் அடங்கிய இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவில் புகழ்பெற்ற கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மணல் சிற்பம் இடம் பெற்றுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை, கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் அவரது குழுவினரால் வடிவமைக்கப்பட்ட இந்த மணல் சிற்பமானது பொதுமக்களின் மனதை மயக்கும் வகையிலும் பொதுமக்களை செல்பி எடுக்க தூண்டும் வகையிலும் மிக நுட்பமாகவும் நுணுக்கமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் : செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News