ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி 7 கிராமங்களில் 2வது முறையாக தீர்மானம்..!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி 7 கிராமங்களில் 2வது முறையாக தீர்மானம்..!

பரந்தூர்

பரந்தூர்

Kanchipuram District | பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி 7 கிராம ஊராட்சிகளில் 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanchipuram, India

  பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடக்கோரி 7 கிராம ஊராட்சிகளில் 2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  சென்னையின்  இரண்டாம் விமான நிலையம்  காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 கிராமங்கள் உள்ளடங்கிய மிகப்பெரிய பசுமை விமான நிலையம் கட்டுவதற்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  இதற்கிடையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

  இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க கூடாது... போலீஸ் உத்தரவு

  இது மட்டுமின்றி, ஏகனாபுரம், மேலேறி, அங்கமாபுரம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக முழுவதுமாக அகற்றப்படும் நிலையிலுள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் அனுதினமும் தங்களது பணிகளை முடித்துவிட்டு இரவு நேரங்களில் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பல்வேறு கருத்துக்களை கலந்து ஆலோசித்து  இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், ஏகனாபுரம், மேலேறி, நெல்வாய், வளத்தூர், பரந்தூர், நாகப்பட்டு உள்ளிட்ட ஏழு கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், புதிதாக அமைய உள்ள விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இதையும் படிங்க : அதிகரித்து வரும் காய்ச்சல், இருமல் - அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்..!

  ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குநர் கோபிநாத், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது புதிதாக விமான நிலையம் அமைக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthi K
  First published:

  Tags: Airport, Kanchipuram