ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

மழை நீர் வடிகால்வாய் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி... மாங்காடு அருகே சோகம்

மழை நீர் வடிகால்வாய் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி... மாங்காடு அருகே சோகம்

தனியார் ஊழியர் பலி

தனியார் ஊழியர் பலி

கால்வாய்க்காக தொண்டப்பட்ட பள்ளத்தில் கால் இடறி விழுந்த அவர் பலியானார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Mangadu, India

  மாங்காடு அருகே மழை நீர் வடிகால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலினார்.

  பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும் மழை நீர் எங்கும் தேங்காமல் இருக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக மழை நீர் வடிகால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக ஒருசில இடங்களில் பள்ளங்கள் தொண்டப்பட்டுள்ளது.

  இந்நிலையில், சென்னையை அடுத்த மாங்காடு - மலையம்பாக்கம் சாலையில் ஓராண்டுக்கு மேலாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாக ஆபத்தான நிலையில் திறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

  இந்நிலையில், இன்று  அதிகாலை பணிக்கு சென்றுகொண்டிருந்த மாங்காடு பாலண்டிஸ்வர் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான லட்சுமிபதி( 42) கால் இடறி கால்வாய்க்காக தொண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில், படுகாயமடைந்த லட்சுமிபதி உயிரிழந்தார்.

  இதையும் படிங்க: கணவருடன் தகராறு... திருமணம் செய்ய வற்புறுத்திய இளம் பெண்... கொலை செய்த முன்னாள் காதலன்

  உயிர் இழந்த லட்சுமிபதி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மாங்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Death, Kancheepuram