ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

ஊராட்சி தலைவர் வெட்டிப் படுகொலை.. சென்னை அருகே நடந்த கொடூரம்!

ஊராட்சி தலைவர் வெட்டிப் படுகொலை.. சென்னை அருகே நடந்த கொடூரம்!

செங்கல்பட்டு கொலை

செங்கல்பட்டு கொலை

Chengalpattu murder | சடலத்தை கைப்பற்றிய போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chengalpattu | Vandalur | Kanchipuram

    மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) சி.வெங்கடேசன் (48).

    புரட்சி பாரத கட்சியை சேர்ந்த இவர்,  நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் மாடம்பாக்கம் பகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று இரவு ஆதனூர், ராகவேந்திரா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம கும்பல் வெங்கடேசனை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

    இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் செங்கல்பட்டு.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chengalpattu, Crime News, Kanchipuram, Murder