ஹோம் /நியூஸ் /kanchipuram /

“முதலில் உட்காருங்க... அப்புறம் மனு கொடுங்க‌..“ காஞ்சிபுரத்தில் புகார் அளிக்க வரும் மக்களை ஆச்சர்யப்படுத்தும் காவல்நிலையம்

“முதலில் உட்காருங்க... அப்புறம் மனு கொடுங்க‌..“ காஞ்சிபுரத்தில் புகார் அளிக்க வரும் மக்களை ஆச்சர்யப்படுத்தும் காவல்நிலையம்

பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம்

பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையம்

Kanchipuram District News : காஞ்சிபுரத்தில் புகார் அளிக்க வரும் மக்களிடம் கனிவுடன் செயல்படும் முன்னோடி காவல்நிலையம்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தில் உள்ள பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அமர தனி காத்திருப்பு அறை அமைக்கப்பட்டிருப்பது புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க 14 காவல் நிலையங்களும், இரண்டு மகளிர் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காஞ்சிபுரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம் அடுத்துள்ள பாலுசெட்டிசத்திரம் பகுதியில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையமானது இயங்கி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருகின்ற நிலையில் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் வசதிக்காக காவல் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் அமர மற்றும் ஓய்வெடுக்க தனி காத்திருப்பு அறை அமைக்கப்பட்டிருப்பது புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : காஞ்சிபுரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் கோயில்... பக்தர்கள் வேதனை...

மேலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை காத்திருக்கவும், மேலும் விசாரணை மேற்கொள்ளும் வரை காத்திருக்க தனி காத்திருப்பு அறை அமைக்கப்பட்டிருப்பது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இக்காவல் நிலையம் ஓர் முன்மாதிரி காவல் நிலையமாகவே உள்ளது.

இக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி கேமராக்கள், குடிநீர், கழிவறை வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை பூர்த்தியடைய செய்யும் விதமாக உள்ளது.

காவல் நிலையம் என்றாலே பொது மக்கள் சற்று தயக்கம் கொள்ள வைக்கும் நிலையில் இக்காவல் நிலையத்தின் நுழைவு வாயிலில் பல வகை செடிகள் வைக்கப்பட்டு பல மன நிலைகளில் புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு ஓர் நல்ல பசுமைச் சூழலை உருவாக்கும் விதமாகவும் புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு ஓர் நல்ல மன அமைதியான சூழலை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது மட்டுமின்றி காவல் நிலையத்திற்கு வருபவர்கள் எளிதில் தெரிந்துக்கொண்டு, அணுகும் விதமாகவும் வரவேற்பு அறை, ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை என அனைத்து அறைகளுக்கும் முறையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக் 

First published:

Tags: Kanchipuram, Local News