Home /News /kanchipuram /

பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு.. ஜி.கே.மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு - அன்புமணி ராமதாஸ்

பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு.. ஜி.கே.மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்...

அன்புமணி ராமதாஸ்...

Kancheepuram | பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்ஜி கே மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India
    காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு 12 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்புகள், எடுக்கப்படுவதால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்ப்பு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டார்.

    கருத்து கேட்ப்பு கூட்டத்தில் பரந்தூர், வளத்தூர், மேல் பொடவூர், தண்டலம், மடப்புரம், நெல்வாய், ஏகனாபுரம், இடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கிலி பாடி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு உள்ளனர்.



    இது குறித்து அவர் மேடையில் பேசுகையில்,  ”பரந்தூர் விமான நிலையம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக தலைவர் ஜி கே மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். குழு கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறின்னார்.

    Also see... சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

    மேலும், “ பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைய எந்த அடிப்படையில் இந்த இடம் தேர்வு செய்தார்கள் என்பது தெரியவில்லை. தமிழக அரசு அறிவிப்பு மட்டுமே உள்ளது. விவசாயத்தையும், நீர்நிலகளையும் அழித்து வளர்ச்சி பணிகளான விமான நிலையம் கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாது. வளர்ச்சி அவசியமானது வளர்ச்சி நமக்கு தேவை, ஆனால் விவசாயத்தை நீர்நிலைகளை அழித்து வரும் வளர்ச்சியை தான் நாங்கள் எதிர்க்கிறோம் எடுத்துக்காட்டாக 8 வழி சாலை என்.எல்.சி வளர்ச்சி திட்டம் இல்லை. அழிக்கும் திட்டம்” என்று கூறினார்.

    பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, “ 7 பேர் கொண்ட குழு தமிழகத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு ஏன் பரந்தூர் இடத்தை தேர்வு செய்தார்கள் என எழும் அனைத்து கேள்விகளுக்கும் குழு அறிக்கை தந்தபின் பாமக-வின் அடுத்த நடவடிக்கை தெரிவிக்கப்படும்” என அன்புமணி ராமதாஸ்  கூறினார்.

    செய்தியாளர்: சந்திர சேகர், காஞ்சிபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai Airport, Kancheepuram, PMK, Pmk anbumani ramadoss

    அடுத்த செய்தி