முகப்பு /செய்தி /kanchipuram / “நாங்க ஸ்கூலுக்கு போகனும்.. வேறு வழி கிடையாது..” காஞ்சியில் ஆபத்தாக ஆற்றை கடக்கும் மாணவிகள்

“நாங்க ஸ்கூலுக்கு போகனும்.. வேறு வழி கிடையாது..” காஞ்சியில் ஆபத்தாக ஆற்றை கடக்கும் மாணவிகள்

ஆற்றை ஆபத்தாக கடக்கும் மாணவிகள்

ஆற்றை ஆபத்தாக கடக்கும் மாணவிகள்

Kanchipuram District News : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெரும்பாக்கம் பாலாறு தரைப்பாலம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தையும், திருவண்ணாமலை மாவட்டத்தையும் இணைக்கும் பகுதியான காஞ்சிபுரம் அருகே உள்ள பெரும்பாக்கம் பாலாற்றில் இருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

பெரும்பாக்கம் தரைப்பாலம் சாலையை பயன்படுத்தி வந்த வட இலுப்பை, பிரம்மதேசம், வளவனூர், புதூர்,புதுப்பாடி, சர்க்கரமல்லூர், தென்னாம்பட்டு, நாட்டேரி, புத்தனூர், அழிவடை தாங்கி வெம்பாக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து வசதி தடைபட்டுள்ளதால் 30 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றிக்கொண்டு செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெரும்பாக்கம் சுற்று வட்டார கிராமப் பகுதியில் இருந்து பாலாற்றின் மறு கரையில் உள்ள வட இலுப்பை மற்றும் செய்யாறு, ஆற்காடு, பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பாலாற்றில் செல்லும் வெள்ளப்பெருக்கின் ஆபத்தை உணராமல் உயிரை பணயம் வைத்து ஆற்றில் இறங்கி குறுக்கே நடந்து அக்கரைக்கு சென்று பயணிக்கின்றனர்.

இதையும் படிங்க : இறுதிச்சுற்று பட பாணியில் பாக்ஸிங்கில் சாதனை படைத்த காஞ்சிபுரம் மாணவி!

இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தையும், காஞ்சிபுரம் மாவட்டத்தையும் இணைக்கும் பெரும்பாக்கம் தரைப்பாலத்தை, உயர்மட்ட மேம்பாலமாக அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Kanchipuram, Local News