Home /News /kanchipuram /

‘விமான நிலையம் வேண்டாம்.. விவசாயம் காப்போம்..’ பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 50வது நாளாக பதாகைகளுடன் மக்கள் போராட்டம்

‘விமான நிலையம் வேண்டாம்.. விவசாயம் காப்போம்..’ பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 50வது நாளாக பதாகைகளுடன் மக்கள் போராட்டம்

பரந்தூர் விமான நிலையம்- போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்

பரந்தூர் விமான நிலையம்- போராட்டத்தில் பள்ளி மாணவர்கள்

Kancheepuram | பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-வது நாளாக நடைபெற்ற இரவு நேர போராட்டத்தில் பெண்கள் கண்களில் கருப்பு பட்டை அணிந்தும், சிறுவர்கள் பள்ளி உடை அணிந்தும் விவசாயத்தை காப்போம் என்று கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India
    சென்னையின்  இரண்டாம் விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 கிராமங்கள் உள்ளடங்கிய மிகப்பெரிய பசுமை விமான நிலையம் கட்டுவதற்கு ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    விமான நிலையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் பாதிக்கப்படும் என்றும் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக 12 கிராம மக்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இதில் குறிப்பாக முழுவதுமாக அகற்றப்படும் நிலையிலுள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் அனுதினமும் தங்களது பணிகளை முடித்துவிட்டு இரவு நேரங்களில் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பல்வேறு கருத்துக்களை கலந்து ஆலோசித்து  இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரவு நேர போராட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்களும் மாணவர்களும்


    50-வது நாள் இரவாக நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தில் குழந்தைகளும் பள்ளி சீருடை அணிந்து கலந்துக் கொண்டனர். பெண்கள் கண்களை கருப்பு துணியினால் கட்டிகொண்டும், கைகளில் ‘ விவசாய நிலத்தை அழிக்காதே, விவசாய வயிற்றில் அடிக்காதே ‘ போன்ற பதாகைகளை ஏந்தியும், கருப்பு கொடிகளை தங்களது கைகளில் ஏந்திவாறு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

    Also see... தமிழக அரசுக்கு ஊராட்சித் தலைவர்கள் கோரிக்கை

    மேலும் "காப்போம் காப்போம் விவசாயத்தை காப்போம்","சோறு போடும் மக்களை கூறு போட பார்ப்பதா" என பள்ளி மாணவர்களும் கோஷங்களை எழுப்பி  எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் குறிப்பாக பள்ளி சிறுவ, சிறுமியர்கள் முன்னிறுத்தப்பட்டு அவர்கள் கோஷங்எளை எழுப்ப அதனை பெரியவர்கள் பின்தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Airport, Kancheepuram, Protest

    அடுத்த செய்தி