Home /News /kanchipuram /

நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் வராது – சீமான் ஆவேசம்

நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் வராது – சீமான் ஆவேசம்

சீமான்

சீமான்

Parandur Airport : ஏர்போர்ட் எங்கு வேண்டும் என்றாலும் கட்டலாம். எந்தக் கொம்பாதி கொம்பனும் விவசாய நிலங்களை உருவாக்க முடியாது. – சீமான்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக பாதிக்கப்படும் கிராமங்களுக்கு சென்று பொது மக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் சீமான் பேசுகையில், இரண்டாவது ஏர்போர்ட் இந்த இடத்தில் அமைவதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் காரணம். அனைத்து விமானத்தையும் அரசு விற்று வருகிறது.

    ‘அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோ போலியானது’ – மதுரை பாஜக தலைவர் விளக்கம்; காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

    அதானி துறைமுகத்தை கட்டுவது போல், ஏர்போர்ட்டைக் கூட கட்டலாம். இதை நேரடியாக அதானி கட்டினால் நாம் சண்டை போடுவோம், அதனால் அரசு கட்டி அவரிடம் கொடுக்கப் போகிறது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் 37 குழு அமைத்துள்ளார், அடுத்து 38 வது குழு அமைப்பார் வேறு எதையும் செய்ய மாட்டார்.

    சென்னை விமான நிலையம் சரி இல்லை என்று யாராவது குறை கூறினார்களா. உலகத்திலேயே மிகப்பெரிய விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில்  ஏன் இந்த விமான நிலையம். ஏர்போர்ட் எங்கு வேண்டும் என்றாலும் கட்டலாம், எந்தக் கொம்பாதி கொம்பனும் விவசாய நிலங்களை உருவாக்க முடியாது. ஒரு விவசாய நிலம் உருவாக வேண்டுமென்றால் பல தலைமுறையில் வேர்வையும் ரத்தமும் சிந்தி இருக்க வேண்டும் .



    அரசு ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லை. ஆனால் விமான நிலையம் கட்ட காசு உள்ளது. 2028-க்குள் விமான நிலையம் கட்டவிலை என்றால் அரசு பொருளாதாரத்தில்  பின்னோக்கி சென்று விட்டது என கூறும் அரசு, 2035 க்குள் நீர் பற்றாக்குறை ஏற்படுமே அதற்கு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?. நான் இங்கு இருக்கும்  விமான நிலையம் இங்கு அமையாது என கூறினார்.

    காது குத்தப்பட்டதா... திமுக எம்எல்ஏ பேரப் பிள்ளைகளுக்கும், வருமான வரித்துறைக்கும் - அண்ணாமலை விமர்சனம்

    இதனை அடுத்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எட்டு வழி சாலைகளை எதிர்த்து போராடினீர்களா இல்லையா ?. எட்டு வழி சாலை என்றால் நாங்கள் எதிர்ப்போம் என சொல்லிவிட்டு , பயணம் தூர குறைப்பு சாலை என பெயர் மாற்றி விட்டார்கள், இது தவறு, என சீமான்  தெரிவித்தார்.

    செய்தியாளர் : சந்திரசேகர், காஞ்சிபுரம்
    Published by:Musthak
    First published:

    Tags: Seeman, Tamilnadu government

    அடுத்த செய்தி