ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

நவராத்திரி விழா: ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிபுரம் நாகதுர்க்கை அம்மன்...

நவராத்திரி விழா: ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிபுரம் நாகதுர்க்கை அம்மன்...

நாக துர்கை

நாக துர்கை

Kanchipuram | நவராத்திரி விழாவையோட்டி காஞ்சிபுரம் செவிலிமேடு நாகதுர்கை அம்மன் அருள்பீடத்தில் 1, 57000 புதிய ரூபாய் நோட்டக்களினால் மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanchipuram, India

  கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் நவராத்திரி விழாவை ஒட்டி பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வித விதமான அலங்காரங்கள் சேதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள நாகதுர்க்கை அம்மன் அருள் பீடத்தில் நவராத்திரி விழாவானது ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

  அந்த வகையில் இவ்வாண்டிற்கான நவராத்திரி விழாவானது கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி வரும் 5-ஆம் தேதி விஷ்வரூப தரிசனமும் சர்வ அலங்காரத்துடன் அசூரசம்ஹாராம் விழாவுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இந்த நவத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் நாகதுர்கை அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் காட்சிளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

  அந்த வகையில் அவ்விழாவின் ஏழாம் நாளான இன்று நாக துர்க்கையம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாலட்சுமிக்கு அலங்காரமனாது சேவிக்கப்பட்டு 10,20,50,100,200,500 புதிய ரூபாய் நோட்டுக்களினால் 1,57,000 ரூபாய் அலங்காரமானது சேவிக்கப்பட்டு நகை ஆபரணங்கள் அளிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  Also see... திருப்பதி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் விழா.. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி..

  இந்த 1,57,000 ரூபாய் நோட்டுக்களினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த நவராத்திரி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்திட வருகைதந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்ன பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kanchipuram