உலகப் புகழ்பெற்ற 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நடந்த திருக்கோயில் ஆன வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்திருக்கோவிலுக்கு தினந்தோறும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இத்திருக்கோயிலில் உள்ளே உள்ள நரசிம்மன் சன்னதியில் பூஜை முறையில் கிட்டு மற்றும் ராகவன் என்ற 2 பட்டாச்சியாராக உள்ள அண்ணன், தம்பிக்கிடையே பிரச்சனை. இந்த பிரச்சனையில் கிட்டு பட்டர் கோவிலின் சந்நிதிக்கு கதவை பூட்டு போட்டுவிட்டர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Also see... கார்த்திகைக்கு காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுங்கள்.. சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்..!
இரண்டு பட்டாசியார்கள் சண்டை போட்டுகொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனால் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நரசிம்மர் சன்னதி பூட்டியே கிடந்ததால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் முகசுழிப்புடன் திரும்பிய அவலம் ஏற்பட்டது.
ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக வடகலை-தென்கலை பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில் தற்போது வடகலையிலேயே விஸ்வரூபம் எடுக்கும் குடும்ப பிரச்சனையை தீர்க்க இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AthiVaradar, Kanchipuram