ஹோம் /நியூஸ் /kanchipuram /

வாலாஜாபாத் அருகே இருளர் இன மக்களுக்கு நவீன குடியிருப்பு வீடுகள்...

வாலாஜாபாத் அருகே இருளர் இன மக்களுக்கு நவீன குடியிருப்பு வீடுகள்...

இருளர் இன மக்களுக்கு நவீன குடியிருப்பு வீடுகள்

இருளர் இன மக்களுக்கு நவீன குடியிருப்பு வீடுகள்

Kanchipuram District News : வாலாஜாபாத் அருகே இருளர் இன மக்களுக்கு நவீன குடியிருப்பு வீடுகள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழகம் முழுவதும் இருளர் இன பழங்குடி மக்களுக்கு நவீன குடியிருப்பு வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு வழங்கும் பணியை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு, வாரணவாசி, பழையசீவரம், வாலாஜாபாத் பேரூராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் நீர் நிலைகளின் ஓரம் குடிசைகள் கட்டி வசிக்கும் ஏழ்மை நிலையில் உள்ள இருளர் இன பழங்குடி மக்கள் 74 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீட்டு மனையுடன் வீடுகள் கட்டி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.

அதன்படி வாலாஜாபாத் அருகே ஊத்துக்காடு ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வாலாஜாபாத் - தென்னேரி கூட்டு சாலை அருகில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின் பேரில் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு அளவீடு செய்து ஓதுக்கப்பட்டு சுமார் ₹3 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் 74 வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : 40 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் பள்ளியில் படித்த மாணவர்கள்.. 96 பட பாணியில் ரீயூனியன்..

மேலும் அந்த குடியிருப்பு பகுதிக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்கவும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News