ஹோம் /நியூஸ் /kanchipuram /

"ஜாக்கிரதையாக இருங்கள்" வேலை செய்யாத அதிகாரிகளை நேரில் எச்சரித்த அமைச்சர்!

"ஜாக்கிரதையாக இருங்கள்" வேலை செய்யாத அதிகாரிகளை நேரில் எச்சரித்த அமைச்சர்!

அமைச்சர் எச்சரிக்கை

அமைச்சர் எச்சரிக்கை

kanchipuram minister warning | உரிய நடவடிக்கை எடுக்கப்படாததை அறிந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என அதிகாரிகளிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் மனுக்கள் பெறும் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் கலந்துகொண்டார். அப்போது, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர், கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படாததை அறிந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன், அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். மேலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுக்குதான் அவப்பெயர் ஏற்படுவதாகவும் கூறினார். அதிகாரிகள் வேலை செய்வதே இல்லை என கூறி, ஜாக்கிரதையாக இருங்கள் என எச்சரித்தார். மேலும் மக்கள் கோரிக்கைகளை உடனடியாக சரிசெய்து கொடுத்து இந்த ஆட்சிக்கு நல்ல பெயரை பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்க்கொடி குமார், தேவேந்திரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Kanchipuram, Local News, Minister