ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சிமன்ற தலைவரை கொன்ற கொடூரம்.. சிசிடிவி காட்சியில் அம்பலமான உண்மை!

நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சிமன்ற தலைவரை கொன்ற கொடூரம்.. சிசிடிவி காட்சியில் அம்பலமான உண்மை!

மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை

மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் கொலை

ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதி வணிகர்கள் கடைகளை அடைத்து துக்கம் அனுசரிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kancheepuram (Kanchipuram), India

  மாடம்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

  சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரிர மாடம்பாக்கம், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) சி.வெங்கடேசன் (வயது-48) இவருக்கு கவிதா என்ற மனைவி, சினேகா (17) ஷாலினி(18) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

  புரட்சி பாரத கட்சியை சேர்ந்த இவர், கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சையாக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  இந்நிலையில் இவர் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து இரு சக்கர வாகனம் மூலமாக ஆதனூர் பிரதான சாலையில் ராகவேந்திரா நகருக்கு செல்லும் சந்திப்பில் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர் ராமலிங்கம் மற்றும் மூன்றாவது வார்டு மெம்பர் சத்தியநாராயணன் ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார்.

  அப்போது மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறுக்கும் மேற்பட்ட மர்ம கும்பல் வெங்கடேசன் மீது நாட்டு வெடிகுண்டை வீசுகின்றனர்.

  ALSO READ | வாய்க்காலில் அழுகிய நிலையில் மிதந்த பெண் சடலம்.. உடுமலை அருகே அதிர்ச்சி!

  இதில் அதிர்ச்சி அடைந்தவர் அங்கிருந்து ஆதனூர் பிரதான சாலையில் ஓடி சிலம்பம் நகர் பகுதியில் சென்று உள்ளார். அங்கு அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

  இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வெங்கடேசனை கொலை செய்ய ஒரு வருடத்திற்கு முன்பு கொலை முயற்சி நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

  ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்டதை அடுத்து மாடம்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாடம்பாக்கம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் அனைத்து கடைகளிலும் அடைத்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

  செய்தியாளர்: சுரேஷ்

  Published by:Anupriyam K
  First published:

  Tags: CCTV, Kancheepuram, Murder case