ஆளாக்கிய தந்தைக்கு மார்பிள் கற்களால் சிலை செய்து வீட்டு நுழைவு வாயிலில் வைத்து வழிபட்டு வரும் சகோதரர்கள். மூத்த குடிமக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விஞ்ஞான வளர்ச்சியில் மயங்கி தனிமையில் வாழ விரும்பிய இக்கால இளைஞர்களால் நாளுக்கு நாள் முதியோர் இல்லங்களில் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வியாபார நிமித்தமாக வந்த எஸ்.கே. அருணாசல பாண்டியன் என்பவர் அவ்வூரிலேயே தனது மனைவி மகளுடன் வசிக்க துவங்கி உள்ளார். இவருக்கு பா.அன்புராஜ், பா. அன்புகண்ணன் என்ற இரு மகன்களும் , பா.செல்வி என்று மகளுடன் கிராமத்திலேயே சிறிய மளிகைக்கடை மற்றும் நிதி சேமிப்பு நிலையம் நடத்தி வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அகாலமரணம் அடைந்தார். இவரது இறப்பு இவர்களது குடும்பத்தை பெரிதும் பாதித்த நிலையில் அவரது மனைவி தேனம்மாள் அவருடைய நினைவாகவே இருந்துள்ளார். தாயாரின் நிலை கண்டு, அவரது உரையைக் கேட்ட அவரது இரு மகன்களும் அவரது தந்தையின் சிலை செய்து வீட்டில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிலை தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆலோசித்து பின் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மார்பில் கற்களால் உருவாக்கப்பட்ட மார்பளவு சிலையை தந்தையர் தினத்தன்று வீட்டின் நுழைவு வாசல் அருகே அமைத்துள்ளனர்.
மிக நேர்த்தியாக அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது அவர் அணிந்திருந்த சட்டை அவருடைய பேனா உள்ளிட்ட பொருட்களை சிலைக்கு அழகு சேர்த்து வைத்துள்ளது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் அனைவரும் அவரைப் பார்த்து விட்டு செல்லுமாறு அமைந்திருப்பதும், வீட்டிற்குள் நுழையும்போது அவரைப் பார்க்காமல் நுழைய முடியாது என்ற வகையில் இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலையை அக்கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து மூத்த மகன் பா.அன்புராஜ் கூறுகையில், தனது தந்தை மிக கடின வேலைகளில் ஈடுபட்டு எங்களை ஆளாக்கி பிறருக்கு உதவி செய்யும் வகையில் அறிவுரைகள் வழங்கி வந்த நிலையில் திடீரென அவரது மறைவு எங்களால் ஈடு செய்ய முடியவில்லை எனன்று தெரிவித்தார்.
மேலும் மூத்த குடிமக்களை, வாழும்போது அவர்களுடைய ஆசைகள், அவர்களுடைய அறிவுரையை கேட்டு வாழ்நாளில் நடக்க வேண்டும் என தாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் - சந்திரசேகர் - காஞ்சிபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Father's Day, Kanchipuram, Statue