ஹோம் /நியூஸ் /kanchipuram /

காஞ்சிபுரத்தில் முழு கொள்ளவை எட்டிய தென்னேரி- ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் பொதுமக்கள்

காஞ்சிபுரத்தில் முழு கொள்ளவை எட்டிய தென்னேரி- ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் பொதுமக்கள்

தென்னேரி

தென்னேரி

காஞ்சிபுரம் தென்னேரி நிரம்பி வழியும் நிலையில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அங்கே குளிக்கின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரி நீர் கலங்கல் வழியாக ஆர்ப்பரித்து செல்லும் நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மீன்பிடித்தும் குளித்தும் வருகின்றனர்.

ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி கிராமத்தில் உள்ள தென்னேரி ஏரி தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஏரி 18 அடி ஆழம் கொண்டது. இந்த ஏரியின் மூலம் 5,858 ஏக்கர் நீர் பாசன பரப்பு கொண்டது.

ஆபத்தை உணராமல் குளிக்கும் மக்கள் 

மாண்டஸ் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீரானது தென்னேரி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் முழு கொள்ளளவான 18 அடியை எட்டியுள்ளது.  ஏரிக்கு தொடர்ந்து  நீர்வரத்து இருப்பதால்  உபரி நீர் கலங்கல் வழியாக  வெளியேறி  கொண்டிருக்கிறது.

குளிக்கும் பெண்கள்

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர் நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கவோ மீன் பிடிக்கவோ அல்லது செல்ஃபி எடுக்க கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மீன் பிடிக்கும் இளைஞர்கள்

இந்நிலையில் தென்னேரி ஏரி முழு கொள்ளளவை எட்டி கலங்கல்கள் வழியாக நீர் ஆர்ப்பரித்து செல்லும் நிலையில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் மீன்பிடித்தும், குளித்தும் வருகின்றனர்.

இதனால் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை காவல்துறையினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி பொதுமக்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Kanchipuram, Local News