ஹோம் /நியூஸ் /kanchipuram /

ஆசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் சாதித்த காஞ்சிபுரம் மாணவர்கள்

ஆசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் சாதித்த காஞ்சிபுரம் மாணவர்கள்

காஞ்சிபுரம் மாணவர்கள்

காஞ்சிபுரம் மாணவர்கள்

Kanchipuram | ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் சாதித்த காஞ்சிபுரம் மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான கிக்பாக்சிங் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி நீனா மற்றும் மாணவர் சரத்ராஜ் ஆகிய இருவரும் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்நிலையில் அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் பி.ஏ.தமிழ் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வருபவர் நீனா. இவர் தாய்லாந்தில் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்ற ஆசிய அளவிலான சீனா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் உட்பட 20 நாடுகள் கிக் பாக்சிங் போட்டியில் காஞ்சிபுரம் மாணவியான நீனா கிரியேட்டிவ் ஃபார்ம் எனும் பிரிவில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கமும் லைட் காண்டாக்ட் பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்றுள்ளார்.

பாக்ஸிங்கில் வென்ற மாணவர்கள்

அதே போல் காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூரில் உள் அக்சயா கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருபவர் சரத்ராஜ். இவரும் ஆசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் லைட் காண்டாக்ட் பிரிவில் வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இருவரையும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.ரமேஷ், கிக்பாக்சிங் பயிற்றுநர் அருண் ஆகியோரும் உடன் இருந்தார்கள்.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News