காஞ்சிபுரம் புறநகர் பகுதியான புத்தேரி கிராம ஊராட்சியில், மேட்டுத்தெரு பகுதியில் வசிப்பவர் நீலகண்டன்.
நெசவாளியான இவர் தனது மனைவி மலர்கொடியும் நெசவாளியான நிலையில் காஞ்சிபுரம் தனியார் நெசவாளர் மைய நிறுவனத்தில் இருவரும் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு முதுகலை பட்டம் பயிலும் கீர்த்தி நாதன் என்ற மகனும், நீனா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், நீனா மாலை நேர கல்லூரியில் இளங்கலை தமிழ் பட்டபடிப்பு பயின்று வருகிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த நீனா கடந்த நான்கு வருடங்களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே உள்ள தனியார் கிக் பாக்ஸிங் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இதையும் படிங்க : புனித கங்கை நீர் வேண்டுமா? காசிக்கெல்லாம் போக வேண்டாம்.. இனி காஞ்சியிலே கிடைக்கும்!
முதலில் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளிலும் அவ்வப்போது கடும் பொருளாதார நெருக்கடியிலும் அவரது பெற்றோரின் ஊக்கத்தால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில், தாய்லாந்தில் ஆசிய அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து - பாங்காக் பகுதியில் கடந்த 10-ம் தேதி துவங்கி 18-ம் தேதி நிறைவு பெற்றது. இதில், இந்தியா உட்பட 20 நாடுகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பல பிரிவுகளில் போட்டியிட்டனர்.
குறிப்பாக தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நீனா 50 கிலோ எடை பிரிவிலும், வேலூரை சேர்ந்த சரத்ராஜ் 75 கிலோ எடை பிரிவிலும் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.
இந்நிலையில், நீனா CREATIVE FORM-FEMALE HARD STYLE (WEAPON) என்ற பிரிவில்,தனிநபர் போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்று அசத்தினார். இந்த வெற்றியால், ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் முதல் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை என்ற பெயரும் பெற்று நீனா சாதனை படைத்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதேபோல் மற்றொரு போட்டியிலும், நீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். இவருடன் சென்ற தமிழக வீரர் சரத்ராஜ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மேலும் நீனா பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த தான் விளையாட்டு திறனை ஆசிய அளவில் தங்கம் வென்று நிரூபித்ததுபோல், விரைவில் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கும் அளவிற்கு கடுமையாக உழைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News