ஹோம் /நியூஸ் /kanchipuram /

காஞ்சிபுரம் : 30 வருடங்களுக்குப் பிறகு வீட்டுமனை பட்டா.. மகிழ்ச்சியில் கிராம மக்கள்!

காஞ்சிபுரம் : 30 வருடங்களுக்குப் பிறகு வீட்டுமனை பட்டா.. மகிழ்ச்சியில் கிராம மக்கள்!

காஞ்சிபுரம் மக்கள்

காஞ்சிபுரம் மக்கள்

kanchipuram | 30 வருடங்களாக போராடி வந்த மக்களுக்கு ஒரு வழியாக பட்டா கிடைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram) | Kanchipuram

காஞ்சிபுரம் அடுத்துள்ள உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அழிசூர் மற்றும் திணையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் ஒன்றியம்,அழிசூர் மற்றும் திணையாம்பூண்டி கிராமத்தில் கடந்த 30 வருடங்களாக 10க்கு மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக வீட்டு மனை பட்டா வேண்டி மாவட்ட நிர்வாகத்திடமும் கிராம நிர்வாகத்திடமும் பொதுமக்கள் மனு அளித்திருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் அம்மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அழிசூர் மற்றும் திணையாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.

பின்னர் இலவச வீட்டு மனை பட்டாக்களை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் 30 வருடங்களுக்குப் பிறகு தங்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினர்.

First published:

Tags: Kanchipuram, Local News