காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருளர் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளில் அமைச்சர்கள் ஆய்வுக்கு முன்னர் குளறுபடி ஏற்பட்டதால் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவி அதிகாரிகளை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகளும், சிங்காடி வாக்கத்தில் 100 குடியிருப்புகளும், அதேபோல காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டுகுளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகளும், உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் 178 குடியிருப்புகளும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகளும் என காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 443 குடியிருப்புகள் ரூ. 19கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் பழங்குடியினர்களுக்கு கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பணிகளை தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அமைச்சர்களின் வருகைக்கு முன்பாகவே அங்கு வந்திருந்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவி திட்ட பணிகள் குறித்த விளக்கத்தினை ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
அப்போது பணிகள் மந்தமாக நடைபெறுவதையும், தரமற்று நடைபெறுவதையும் திட்டபணிகளில் குளறுபடிய இருப்பதையும் பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர், மற்ற அதிகாரிகளை ஒருமையில் பேசி திட்டினார். அவன் அவன் தனக்கு எதிரான வேலைய பார்த்து இருந்தீங்க உங்களையொல்லாம் கொன்று புதைத்து விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்ததோடு நான் பயப்படுவேன் என நினைக்கிறீர். உனக்கு எங்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அங்கெங்கல்லாம் முற்றுப்புள்ளி வைத்து விடுவேன்” என மிக கடுமையான சொற்களில் பேசினார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வருகை தந்ததும் வீடுகளை காட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி ஒப்பந்ததாரரை வசை பாடினார். அதன் பின்னர் தான் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் த.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவிக்கு கண்டனம் தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: சந்திரசேகர் ராமச்சந்திரன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram