ஹோம் /நியூஸ் /kanchipuram /

Kanchipuram | அடுத்த மாப்பிள்ளை நாங்க... பொண்ணு இருந்தா தாங்க. திருமணத்தில் வைக்கப்பட்ட ரகளையான பேனர்

Kanchipuram | அடுத்த மாப்பிள்ளை நாங்க... பொண்ணு இருந்தா தாங்க. திருமணத்தில் வைக்கப்பட்ட ரகளையான பேனர்

ரகளை பேனர்

ரகளை பேனர்

காஞ்சிபுரத்தை அடுத்த தூசியில் நடைபெற்ற திருமணத்தில் பெண்ணின் மனதை திருடிய வாலிபர் கைது என வித்தியாசமாக பேனர் இளைஞர்கள் ரகளை செய்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரத்தை அடுத்த தூசி பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா. பட்டதாரி இளைஞரான இவர் காஞ்சிபுரத்திலுள்ள ஓர் தனியார் பட்டு ஜவுளி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த ஊரிலிருந்து காஞ்சிபுரம் வந்து செல்லும் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை சேர்ந்த ரேணுகா என்பவருடன் நட்புறவு ஏற்பட்டு பின்னர் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமானது காஞ்சிபுரத்தை அடுத்த தூசி பகுதியிலுள்ள ஓர்‌ தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக மாப்பிள்ளை பூபதி ராஜாவின் நண்பர்கள் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைத்துள்ளனர்.

தம்பதி

அந்த பேனரில் வாலிபர் கைது என்று பெரிய அளவில் எழுதி வைக்கப்பட்ட அதில் குற்றம்-பெண்ணின் மனதை திருடிவிட்டார் என்றும் அதற்கான தீர்பாக மூன்று முடிச்சு போடுதல் என்றும் கைது செய்யும் நாள், கைது செய்யும் நபர் எனவும் குறிப்பிடப்பட்டு அதற்கான சாட்சிகள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என வித்தியசமாக இருந்தது.

மேலும் அதில் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்க்கும் விதமாக திருமணத்துக்கு வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க, பொண்ணு இருந்த தாங்க எனும் எழுத்துகளும் அச்சிடப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் வித்தியாசமாகவும், சிரிப்பூட்டும் வகையில் இருந்த இந்த பேனரை உற்று பார்த்தோடு சிலர் சிரித்து சென்ற நிலையில் பெண் பிள்ளை உள்ளவர்கள் வாயடைத்து போய் முனுமுனுத்தவாரும் சென்றனர். தற்போது இந்த திருமண வரவேற்பு பேனரின் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Kanchipuram, Local News