காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் மற்றும் பால் நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பங்குதாரர் ராஜதாஸ் என்பவர் மனை பிரிவுகளின் பொது உபயோகத்திற்காக சுமார் 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு, கடந்த 1991 ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதூர் அலுவலகத்தில் பதிவு செய்து வழங்கி உள்ளார்.
இந்நிலையில், அந்த நிலங்களை விஜிபி அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்பனை செய்ததாக தெரியவந்தது. அதற்கு உடந்தையாக செயல்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்( இந்து சமய அறநிலையத்துறை, சென்னை ) மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த சார் பதிவாளர் ராஜதுரை (காஞ்சிபுரம் இணை பதிவாளர்) வட்டாட்சியர்கள் எழில் வளவன் (நில எடுப்பு பிரிவு காஞ்சிபுரம்), பார்த்தசாரதி (ஸ்ரீபெரும்புதூர் ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் ) மற்றும் உதவியாளர் பெனடின் ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து, 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் இதுபோல் அரசு நிலத்தை மோசடி செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு ரூபாய் 30 கோடி என தெரிய வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெமிலி மற்றும் ஆயகொளத்தூர் பகுதியில் நில மோசடி வழக்கில் முதல் குற்றவாளியான அமலதாஸ் ராஜேஷ் ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.
Must Read : கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர் கட்டையால் தாக்கி படுகொலை - ஓசூர் அருகே பயங்கரம்
இந்நிலையில், இதே போல் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றும் இன்னும் பல கோடி மதிப்பிலான நிலங்கள் கையகப்படுத்த கூடும் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - சந்திரசேகர்.
உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.