காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சி திருவிழாவிற்கான விளம்பர குறும்படத்தில் காஞ்சியை சேர்ந்த மறைந்த திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமாரை முன்னிலைப்படுத்தியது அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் 2023 ஜனவரி மாதம் 2-ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அண்ணா காவல் அரங்கத்தில் காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்கள் மத்தியில் விளம்பரங்கள் மேற்கொள்ளுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புத்தகத் திருவிழா குறித்த விளம்பர பிரசுரங்கள் மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பும் வகையில் குறும்படம் ஆகியவற்றை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்டார்.
குறும்படத்தில் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்லவர், சோழர் மன்னர்கள் காலங்களில் கட்டப்பட்டு கட்டிடக்கலைக்கு உதாரணமாக விளங்கும் கைலாசநாதர் கோயில், உலகப் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் என பல்வேறு கோவில்கள் இடம்பெற்றது.
மேலும், உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவம் குறித்த காணொளியும், அதே நேரத்தில் சினிமாதுறையில் தனக்கென தனி சகாப்தத்தை உருவாக்கிய மறைந்த பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த பல்புகழ் கொண்ட காஞ்சிபுரம் மாநகரில் புத்தகத் திருவிழா நடைபெறுவதாகவும் குறும்படத்தில் குறிப்பிட்டிருந்தது அனைவரிடத்திலும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News