ஹோம் /நியூஸ் /kanchipuram /

பட்டு சேலை தயாரிப்பதைப் பார்க்க வேண்டுமா.. காஞ்சி புத்தக திருவிழாவிற்கு அடிங்க ஒரு விசிட்

பட்டு சேலை தயாரிப்பதைப் பார்க்க வேண்டுமா.. காஞ்சி புத்தக திருவிழாவிற்கு அடிங்க ஒரு விசிட்

காஞ்சி பட்டு சேலை

காஞ்சி பட்டு சேலை

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள பட்டு சேலை தயாரிக்கும் கைத்தறி நெசவு கூடம் புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் புத்தகங்களை வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்த அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி "புத்தியை தீட்டுவோம்" என்ற வாசகத்தை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கு மைதானத்தில் கடந்த 23-ம் தேதி புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.

பட்டு சேலை நெய்தல்

புத்தகத் திருவிழாவில் 120-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து பல்வேறு புத்தக பதிப்பகத்தாரின் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பட்டு சேலை நெய்யும் நெசவாளர்

இந்நிலையில் பாரம்பரிய உலகப் புகழ் பெற்ற பட்டு சேலை நெய்தலை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் புத்தக திருவிழாவில் ஒரு அரங்கில் மத்திய நெசவாளர் சேவை மையம் சார்பில், பட்டு சேலை நெசவு செய்யும் கைத்தறி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

பட்டு நெய்வதை ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

இந்த கைத்தறி கூடத்தில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை, நெசவாளர்கள் பட்டு சேலை நெசவு செய்யும் காட்சியை நேரடியாக காணும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

Read more: ஆசிய அளவிலான கிக்பாக்ஸிங் போட்டியில் சாதித்த காஞ்சிபுரம் மாணவர்கள்

 அதுமட்டும் இல்லாமல் இந்த அரங்கில் இதுவரை நெசவாளர் தினத்தில் வழங்கப்படும் உயரிய விருதான சிறந்த சேலை வடிவமைப்பு மற்றும் நெசவாளர் விருது பெற்றுள்ள காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் வடிவமைத்த சேலையும், அவர்களுக்கு மத்திய ஜவுளித்துறை சார்பில் வழங்கப்பட்ட பாராட்டு கேடயமும் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு வரும் பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Kanchipuram, Local News