காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில், குழந்தைகள் கல்வி மையத்தில் மடிக்கணினி மூலம் குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் பாடல்கள் வழியாக கல்வி கற்பிக்கும் முறை புத்தகத் திருவிழாவிற்கு வரும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
காஞ்சிபுரத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா இம்மாதம் 23-ம் தேதி தொடங்கி வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள், கணிதப் புதிர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்காக குழந்தைகள் கல்வி கற்பதற்காக தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தக விழாவில் மொத்தம் 125 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 14-வது அரங்கில் காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள ஜானஸ் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்காகவே தனியாக கல்வி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் குழந்தைகளுக்கான தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் எதை வேண்டுமானாலும் குழந்தைகள் இலவசமாக எடுத்துப் படிக்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர மடிக்கணினி மூலம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பற்றிய பொன்மொழிகள், அவரது வாழ்க்கை வரலாறு, கணிதப் புதிர்கள், பாடல்கள், சிறு கதைகள் ஆகியனவற்றை கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இம்மையத்தில் ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் சென்று மடிக்கணினி மூலம் கதைகளையும், பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News