Home /News /kanchipuram /

களையிழக்கும் காஞ்சிபுரம் நெசவுத் தொழில்.. நலிந்துவரும் நெசவாளர்கள் வாழ்வாதாரம்..

களையிழக்கும் காஞ்சிபுரம் நெசவுத் தொழில்.. நலிந்துவரும் நெசவாளர்கள் வாழ்வாதாரம்..

நெசவாளர்கள்

நெசவாளர்கள்

சராசரியாக மாதத்திற்கு 15 சேலைகள் போட்டுக்கொண்டிருந்த தறி இன்று 5 கிடைத்தாலே பெரிது என்று எண்ணி ஓடிக்கொண்டு இருக்கிறது. சில்லறை விற்பனையின் கொள்முதலும் 75 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
தமிழ்நாடு என்றாலே மதுரை மல்லி, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, சேலத்து மாம்பழம், ஈரோடு மஞ்சள் போன்று காஞ்சியின் பட்டும் தமிழகத்தின் அடையாளம் ஆகும். பனாரஸ், சந்தேரி பட்டுக்களைப் போல் காஞ்சிபுரத்துப் பட்டிற்கு என தனி மவுசு உண்டு. கல்யாணம் என்றால் காஞ்சி பட்டு வேண்டும் என்று வாங்கும் பெண்கள் எல்லாம் உள்ளனர்.

ஆனால் அந்த நெசவாளர்களின் நிலை வளர்ச்சி பெற்றுள்ளதா என்று கேட்டால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாக கண்முன் நிற்கும். பரம்பரை பரம்பரையாக பட்டு நெசவுத் தொழில் செய்பவர்கள் கூட இந்த நட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்று தொழிலை விட்டு விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உண்மையான காஞ்சிபுரம் பட்டு என்றால் குறைந்தது 7000 ஆவது ஆகும். கல்யாண பட்டுக்கள் என்றால் 30,000 முதல் 50,000 வரை கூட ஆகும். இது கோவிட் தோற்று பரவலுக்கு முந்தைய விலை நிலவரம். கோவிட் பரவலுக்கு முன்பு ஒரு கிலோ பட்டு நூல் 2500 ரூபாய்க்கு கிடைத்து வந்தது. இப்போது அதன் விலை 6000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வீட்டின் சுற்றுசுவரில் மூவர்ண தேசியக்கொடி - முன்னாள் இராணுவீரர் அசத்தல்

ஆனால் பட்டுசேலை விற்பனையாளர்கள் தங்கள் சில்லறை விற்பனையை அந்த அளவுக்கு உயர்த்த இயலாது. சேலைக்கான தேவையும் குறைந்துவிட்டது. இருக்கும் சேலைகளை முதலில் விற்கவேண்டும். கூடுதல் விலை கொடுத்து சேலையை வாங்கி விற்கமுடியாமல் வைக்க முடியாது என்கின்றனர்.

மூலப்பொருள் விலை ஏற்றம், விற்பனை விலை உயர்த்தாமல் இருப்பது எண்கள் குரல் வலைகளைத் தான் நெரிக்கின்றது. தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து நான்வரும் இந்தத் தொழில் என்னோடு முடிந்துவிடும் போலத் தெரிகிறது. கோவிட் பரவலுக்கு முன் வந்த வருமானத்தை விட மாதத்திற்கு 6000 முதல் 7000 வரை நட்டம் ஏற்படுகிறது. ஓரளவு வரை சமாளிக்கலாம். அதற்கு மேல் வேறு வழி இல்லை. எங்கள் அடிப்படை தேவைகளுக்காகவாது பணம் வேண்டுமல்லவா என்று ஏங்குகிறார்கள்.

சராசரியாக மாதத்திற்கு 15 சேலைகள் போட்டுக்கொண்டிருந்த தறி இன்று 5 கிடைத்தாலே பெரிது என்று எண்ணி ஓடிக்கொண்டு இருக்கிறது. சில்லறை விற்பனையின் கொள்முதலும் 75 சதவிகிதம் வரைக் குறைந்துள்ளது.

சூரியன் அஸ்தமனத்திற்கு பின் தடை, தந்திரியின் சாபத்தால் உருவான அமானுஷ்யம் - மர்மங்கள் நிறைந்த பங்கர் கோட்டை

மலிவான விலையில் சீனாவில் இருந்து பட்டு இறக்குமதி செய்யப்படுவதாலும் உள்நாட்டு நெசவாளர்களின் தொழில் பாதிக்கப்படுகிறது.

இன்றைய விலை ஏற்றத்திற்கு ஏற்ப திருமண பட்டு சேலைகள் எல்லாம் 60000 முதல் 80000 வரை விற்க வேண்டும். ஆனால் அந்த அளவிற்கு போட்டால் விற்பனை ஆகாது. இருக்கும் நிலையை விட மோசமாகிவிடும் என்று வருந்துகின்றனர். தீபாவளி விற்பனை கொஞ்சம் கைகூடும் என்ற நம்பிக்கையில் போவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த விலை பிரச்னையால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு நெசவுத் தொழிலும் நலிவடைந்து வருகிறது. அரசு இதற்கு ஏதேனும் ஆவண செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுகின்றனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Kanchipuram, Silk Saree

அடுத்த செய்தி