ஹோம் /நியூஸ் /kanchipuram /

மத்திய ரயில்வே அமைச்சரை திடீரென சந்தித்த காஞ்சி எம்பி - காரணம் என்ன?

மத்திய ரயில்வே அமைச்சரை திடீரென சந்தித்த காஞ்சி எம்பி - காரணம் என்ன?

மத்திய ரயில்வே அமைச்சரை திடீரென சந்தித்த காஞ்சி எம்பி

மத்திய ரயில்வே அமைச்சரை திடீரென சந்தித்த காஞ்சி எம்பி

Kanchipuram District News : மத்திய ரயில்வே அமைச்சரை திடீரென சந்தித்த காஞ்சி எம்பி - காரணம் என்ன?

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் கோரிக்கை மனு அளித்தார்.

காஞ்சிபுரம் மாநகரில் ரயில் மூலம் தினந்தோறும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோர், பணி நிமித்தமாக செல்வோர் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : காஞ்சிபுரத்தில் தொடர் குற்றச்செயல்... குண்டர் சட்டத்தில் இருவர் கைது..

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகர ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை - கடற்கரை மார்க்கத்திலிருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக திருமால்பூர், அரக்கோணம் வரை சென்று கொண்டிருந்த இரண்டு ரயில் சேவைகள் 40900 மற்றும் 66041 ஆகியவை இரண்டையும் மீண்டும் இயக்க பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் காஞ்சிபுரம் எம்பி மனு அளித்தார்.

மேலும் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள், விரைவு ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையேயான ஓட்டேரி பகுதியில் புதிய ரயில் நிலையம் வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்த மத்திய ரயில்வே அமைச்சருடனான காஞ்சிபுரம் எம்பியின் சந்திப்பு அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News