ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

சனிபகவானை தரிசிக்க வரும் காகம்.. அபிஷேக பாலை கேட்டு வாங்கி குடிக்கும் அதிசயம்!

சனிபகவானை தரிசிக்க வரும் காகம்.. அபிஷேக பாலை கேட்டு வாங்கி குடிக்கும் அதிசயம்!

வைரலாகும் காகம் வீடியோ

வைரலாகும் காகம் வீடியோ

சன்னதி கோபுரத்தில் அமர்ந்து காகம் ஒன்று கா, கா என சத்தம் போட்டு கோவில் அர்ச்சகரை அழைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kancheepuram (Kanchipuram) | Tamil Nadu

  காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள சனீஸ்வரர் கோயிலுக்கு தினசரி வரும் காகம் ஒன்று அர்ச்சகரை அழைத்து சனீஷ்வரருக்கு அபிஷேகம் செய்த பாலை கேட்டு வாங்கி குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள ஊக்கல் பெரும்பாக்கம் கிராமத்தில்நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் விநாயகர் சன்னதிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

  மேலும் இங்கு சனீஸ்வர பகவானுக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.

  இந்த சனீஸ்வர பகவானை தரிசிக்க நாள்தோறும் வருகை தரும் சனீஸ்வரன் வாகனமான காகம் ஒன்று, சுவாமியை தரிசனம் செய்து விட்டு, சன்னதி கோபுரத்தில் அமர்ந்து கா, கா என சத்தம் போட்டு கோவில் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை நாள்தோறும் அருந்திவிட்டு செல்கிறது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Kancheepuram, Viral Video