ஹோம் /நியூஸ் /kanchipuram /

எலெக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து.. தீயில் எரிந்து நாசமான பைக்குகள்!

எலெக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து.. தீயில் எரிந்து நாசமான பைக்குகள்!

காஞ்சிபுரம் பைக் சர்வீஸ் கடையில் தீ விபத்து

காஞ்சிபுரம் பைக் சர்வீஸ் கடையில் தீ விபத்து

Kanjipuram Fire accident | தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்த போதிலும் ஏராளமான பைக்குகள் தீக்கிரையாகின.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram) | Kanchipuram

காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் எலெக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனங்கள் தீயில் எரிந்து சேதமானது.

காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு சுந்தர விநாயகர் தெருவில் வெங்கட்ராமன் என்பவர் எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையம் நடத்தி வருகிறார். நேற்று இரவு, பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வழக்கம்போல் சர்வீஸ் நிலையத்தை மூடிவிட்டு சென்றுள்ளார்.

திடீரென சர்வீஸ் நிலையத்திலிருந்து புகை வந்து தீப்பற்றி எரிவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள், இந்த தீயானது பரவி மளமளவென எரிய தொடங்கியது. பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ALSO READ | காஞ்சிபுரத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

ஆனாலும், 50 லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் மேலான எலெக்ட்ரிக் பைக்குகள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்.

First published:

Tags: Bike, Fire accident, Kancheepuram, Local News