ஹோம் /நியூஸ் /kanchipuram /

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு.. காஞ்சிபுரத்தில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு.. காஞ்சிபுரத்தில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு

Kanchipuram District News : காஞ்சிபுரத்தில் நியாய விலை கடையில் வேலைவாய்ப்பு. 6,000 பேர் பங்கேற்பு. நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் 160 கட்டுநர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. இதில், 6,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள காலியாக உள்ள நியாய விலை கடை விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக நிரப்பபட உள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் 2.3 லட்சம் பேர் ஆன்லைன் மூலமாக கூட்டுறவு துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதன் பேரில் விண்ணப்பித்திருந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் மாவட்டத்தில் காலியாக உள்ள 114 விற்பனையாளர்கள் மற்றும் 160 கட்டுநர்களுக்கான நேர்காணல் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கூட்டுறவு அலுவலக வளாகத்தில் இன்று துவங்கியது.

இதையும் படிங்க : கனமழையால் சரிந்து விழுந்த மரங்கள்... காஞ்சிபுரத்தில் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 6,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து அவர்களுக்கான நேர்காணல் அழைப்பு காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 300 பேருக்கும் மதியம் 300 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 600 நபர்களுக்கு சான்றிதழ்கள் சரி பார்ப்பு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நேர்காணலும் நடைபெற உள்ளது.

விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களை சரி பார்க்க இரு நபர்கள் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை நேர்காணல் செய்ய மூன்று பேர் கொண்ட 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. நேர்காணல் ஏற்பாடுகளையும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை கூட்டுறவு சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் வழங்கி நேர்காணல் பணிகளை துவக்கி வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நேர்காணலானது இன்று முதல் துவங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் நேர்காணல் நடைபெறும் இடத்தில் விண்ணப்பதாரர்கள் அல்லாமல் யாரும் உள்ளே நுழையாத அளவிற்கு காவல் துறை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News