ஹோம் /நியூஸ் /kanchipuram /

புனித கங்கை நீர் வேண்டுமா? காசிக்கெல்லாம் போக வேண்டாம்.. இனி காஞ்சியிலே கிடைக்கும்!

புனித கங்கை நீர் வேண்டுமா? காசிக்கெல்லாம் போக வேண்டாம்.. இனி காஞ்சியிலே கிடைக்கும்!

காஞ்சிபுரம் கங்கை நீர் விற்பனை

காஞ்சிபுரம் கங்கை நீர் விற்பனை

kancheepuram ganga water sale | காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் ஹரித்துவார், ரிஷிகேஷ், காசி உள்ளிட்ட புனித தலங்களுக்கு சென்று அங்கு பாயும் கங்கை நதியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.

அவ்வாறு ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் தங்களுடன் வராத குடும்பத்தினருக்காக கங்கை நதியில் இருந்து புனித நீரை பாட்டிலில் அடைத்துக் கொண்டு வந்து குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் வட மாநில புனித ஆன்மீகத் தலங்களுக்கு சுற்றுலா செல்லவும், கங்கை நதியில் புனித நீராடாவும் முடியாத ஆன்மீக பக்தர்களின் ஏக்கத்தினை போக்கிடும் வகையில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட புனித கங்கை நீரை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

ALSO READ | அத்திவரதர் வைபவத்தில் பல கோடி முறைகேடு.. ஆர்.டி.ஐ-யில் வெளியான பகீர் தகவல்!

அதன்படி புண்ணிய நகரம், கோவில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் 250 மில்லி மீட்டர் பாட்டில்களில் 'கங்காஜல்' என்ற பெயரில் அடைக்கப்பட்ட புனித கங்கை நீர் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. புனித கங்கை நீர் விற்பனை செய்யப்படுவதை அறிந்து தபால் நிலையத்திற்கு வருபவர்களும், ஆன்மீக பக்தர்களும், ஆர்வத்துடன் வந்து பூஜை செய்வதற்கும், புனித நீராடுவதற்கும், தேவைப்படும் புனித கங்கை நீரை வாங்கி செல்கின்றனர்.

செய்தியாளர்: கார்த்திக், காஞ்சிபுரம்.

First published:

Tags: Ganga, Kancheepuram, Local News, Water