Home /News /kanchipuram /

அடேங்கப்பா.. ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்.. பக்தர்கள் நெகிழ்ச்சி

அடேங்கப்பா.. ரூ.15 லட்சம் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்.. பக்தர்கள் நெகிழ்ச்சி

 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப் பட்ட விநாயகர்

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப் பட்ட விநாயகர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ஏலேலசிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் நோட்டுகளால் விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூ.15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் ஏலேலசிங்க விநாயகர் கோவில் அமைந்துள்ளது

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை முழுவதும் அலங்காரம் செய்யப்படும். பின் பொதுமக்கள் வழிபட்டு செல்வர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



    அதைத்தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின் காலையில் ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் சன்னதி கருவரை முழுவதும் அலங்கரிக்கப்பட்டன.



    பின்னர் பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. இந்த ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை பார்ப்பதற்கு ஏராளமானோர் சென்றனர். இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் குப்புசாமி கூறுகையில், முதல் ஆண்டு ரூபாய் நாணயங்களால் அலங்காரம் செய்தோம். பின் ரூபாய் நோட்டுகளால் கருவரை முழுவதும் அலங்காரம் செய்ய ஆரம்பித்தோம். இந்த ஆண்டு 15-ஆம் ஆண்டு என்பதால் நண்பர்கள் மூலம் ரூ. 15 லட்சம் ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்காரம் செய்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    செய்தியாளர் : சந்திரசேகர் ராமச்சந்திரன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kanchipuram, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி