காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மாண்டஸ் புயல் மற்றும் தொடர்மழை காரணமாக பாலாறு ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாலாறு அணைக்கட்டிலிருந்து இன்று (12.12.2022) பிற்பகல் 2.00 மணியளவில் வினாடிக்கு 1724 கன அடி உபரி நீர் பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும் தொடர் மழையின் காரணமாக கூடுதலாக பாலாற்றில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது என பொதுப்பணித் துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாற்றின் / இடது கரை மற்றும் வலது கரையினை ஒட்டி அமைந்துள்ள காஞ்சிபுரம் வட்டம் வாலாஜாபாத் வட்டம், உத்திரமேரூர் வட்டத்தை சேர்ந்த கீழ்க்கண்ட கிராம கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
1. பெரும்பாக்கம்
2. முத்தவேடு
3. பிச்சவாடி
4. விஷார்
5. ஆளவந்தார்மேடு
6. விப்பேடு
7. வெங்கடாபுரம்
8. செவிலிமேடு
9. ஓரிக்கை
10. சின்னகயப்பாக்கம்
11. கோயம்பாக்கம்
12. வில்லிவளம்
13. வெங்குடி
14. வாலாஜாபாத்
15. பழைய சீவரம்
16. கோழிவாக்கம்
17. புஞ்சையரசன்தாங்கல்
18. வளத்தோட்டம்
19. குருவிமலை
20. விச்சந்தாங்கல்
21. ஆசூர்
22. அவலுர்
23. அங்கம்பாக்கம்
24. திருமுக்கூடல்
25. பினாயூர்
26. திருமஞ்சேரி
27. சாத்தனஞ்சேரி
28. கலியப்பேட்டை
29. ஓரக்காட்டுப்பேட்டை
30. காவித்தண்டலம்
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வருவாய் துறை காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை பணியாளர்கள் மூலம் பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் எனவும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது செல்பி போன்றவற்றை செய்ய கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் கால்நடைகளை பாணற்றில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும், வீட்டில் இருக்கும் சிறுவர் சிறுமிகளை ஆற்றில் அருகில் செல்லாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flood, Kanchipuram, Local News