ஹோம் /நியூஸ் /kanchipuram /

கனமழையால் சரிந்து விழுந்த மரங்கள்... காஞ்சிபுரத்தில் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்..

கனமழையால் சரிந்து விழுந்த மரங்கள்... காஞ்சிபுரத்தில் அப்புறப்படுத்தும் பணி தீவிரம்..

கனமழையால் சரிந்து விழுந்த மரங்கள்

கனமழையால் சரிந்து விழுந்த மரங்கள்

Kanchipuram District News : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சரிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக சூறைக்காற்றுடன் தொடர் கன மழை பெய்தது.

இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த மரங்கள் உட்பட்ட 253 மேற்பட்ட மரங்கள் சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சரிந்து விழுந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நிலையில் அதனை பேரிடர் மீட்பு குழுவினர், மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்புத்துறை துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் அகற்றி வைத்தனர்.

இந்நிலையில், இன்று மழையானது முற்றிலுமாக நின்று வெயில் அடிக்க துவங்கி உள்ள நிலையில் சாலை ஓரங்களில் அகற்றி வைத்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Kanchipuram | அடுத்த மாப்பிள்ளை நாங்க... பொண்ணு இருந்தா தாங்க. திருமணத்தில் வைக்கப்பட்ட ரகளையான பேனர்

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வாகை மரம் சரிந்து விழுந்து சாலை ஓரத்தில் அகற்றி வைக்கப்பட்டுள்ள மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளை ஊழியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News