Home /News /kanchipuram /

திமுக கட்சி இல்லை.. கார்ப்பரேட் கம்பெனி - எடப்பாடி பழனிசாமி விளாசல்

திமுக கட்சி இல்லை.. கார்ப்பரேட் கம்பெனி - எடப்பாடி பழனிசாமி விளாசல்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami : அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ, எம்.பி., முதலமைச்சர் என உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்று கூறிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் நிதிகள் மட்டும் தான் தொடர்ச்சியாக வாரிசாக பதவிக்கு வர முடியும் என்று காஞ்சிபுரத்தில் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றுகையில் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Kanchipuram, India
  தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

  காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பாலு செட்டி சத்திரம் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளித்தனர்.

  பின்னர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். அப்போது, “ஒரு சாதாரண கிளைச் செயலாளர் இன்றைய தினம் இயக்கத்தினுடைய இடைக்கால பொதுச் செயலாளராக வந்திருக்கிறேன் என்று சொன்னால் அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியில் மட்டும்தான் நடக்கும், அதிமுக ஜனநாயக அமைப்பு ஜனநாயக கட்சி. இதில் உழைக்கின்றவர்கள், இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றவர்கள் என்றைக்காவது ஒரு நாள் உயர்ந்த பதவிக்கு, உச்ச பதவிக்கு வர முடியும்.

  ஆனால், திமுகவில் வர முடியுமா, வந்துவிட முடியுமா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்ப நிதி எல்லாம் நிதி அற்புதமான பெயர்கள். திமுகவில் நிதிகள் மட்டும் தான் தொடர்ச்சியாக வாரிசாக பதவிக்கு வர முடியும். ஆனால், அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும், எம்.எல்.ஏ. ஆக முடியும், எம்.பி. ஆக முடியும், ஏன் நான் முதலமைச்சராகி இருக்கின்றேன்.

  இப்படி திமுகவில் வர முடியுமா? என்னை சுற்றி பல பேர் இருக்கிறார்கள், இப்படி ஸ்டாலினை சுற்றி நிற்க முடியுமா ஏனென்றால் நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பமாக இருக்கின்றோம். நீங்களும் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்களாக இருக்கிறீர்கள் இதுதான் அதிமுக.

  திமுகவில் அப்படியல்ல மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள், தங்கள் வீட்டு மக்களை பற்றிதான் கவலைப்படுவார்கள். வீட்டில் இருக்கிறவர்களுக்கு யாருக்கு பதவி கொடுக்க வேண்டும், கட்சியில அதிகாரம் வழங்க வேண்டும் அதிகாரப்பதிவு இப்படி கூறு போட்டு நடத்துகின்ற கட்சி திமுக. திமுக ஒரு கட்சி இல்லை அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.

  பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா இன்றைக்கு ஒவ்வொரு மக்களும் எண்ணிக் கொண்டிருப்பது அந்த மூன்று பேர், மூன்று தலைவர்கள். நாட்டை ஆளுகின்ற பொழுது நாட்டு மக்களுக்கு கிடைத்த நன்மை, அப்படியே நாங்கள் பிரதிபலித்தோம் நான்கு வருடம் இரண்டு மாதம் முதலமைச்சராக இருந்த பொழுது, அம்மாவுடைய அரசு முப்பெரும் தலைவர்களுடைய கனவுகளை நினைவாக்கியது.

  திமுகவினர் தற்போது 14 மாதம் ஆட்சி செய்தார்கள். இந்திய நாட்டிலேயே முதன்மை முதலமைச்சராம் ஸ்டாலின், எதிலே லஞ்சம் வாங்குவதிலா?, லஞ்சம் வாங்குவதில் முதன்மையான முதலமைச்சர், முதன்மையான அரசாங்கம் திமுக அரசாங்கம். இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

  எடப்பாடி பழனிசாமி


  அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது, நிர்வாகியின் மீது வழக்கு போடுவது, கஷ்டப்படுத்துவது, துன்பப்படுத்துவது. அதனால் அதிமுக விரட்டி அடக்கப்படுமாம், ஒருபோதும் நடக்காது ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கிறது முதலமைச்சர் வாய்ப்பு, ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் நீங்கள் முதலமைச்சராகி விட்டீர்கள், அதை உருப்படியாக செய்யுங்கள்.

  கிடைக்கின்ற பதவியை வைத்து மக்களுக்கு நன்மை செய்து பாராட்டை பெறுங்கள் அதைவேண்டாம் என்று சொல்லவில்லை.
  வழி தவறி பாதை மாறி போனீர்கள் என்றால் எதிர்காலத்தில் நீங்கள் நிறைய சந்திக்க நேரிடும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டாலினுக்கு அரசாங்கத்தைப் பற்றியும் தெரியாது, நாட்டைப் பற்றியும் தெரியாது. என்ன செய்வது என்பதும் தெரியாது, அப்படிப்பட்ட முதலமைச்சர் தான் தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஏனென்றால் எல்லா திட்டத்தையும் அறிவிப்பார். வேகமாக அறிவிப்பார் அறிவித்த உடனே அதற்கு குழு போட்டு விடுவார் இதுவரைக்கும் 37 குழு போட்டு இருக்கிறார். ஒரு குழு ரெண்டு குழு அல்ல 37 குழு போட்டு இன்றைக்கு சாதனை படைத்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். வேறு எந்த ஆட்சியிலுமே குழு போட்ட சரித்திரம் கிடையாது. ஏதோ ஒன்று இரண்டு முக்கியமாக குழு போட்டு அறிக்கை பெற்று தீர்வு காண்பார்கள்.

  திமுக ஆட்சியில் எல்லாவற்றிற்கும் குழு அமைப்பது ஏனென்றால், ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது, ஏன் ஏனென்றால் குழு போட்டால் நிருபர் கேட்பார்கள் மக்கள் கேட்பார்கள் குழு போட்டு விட்டால் குழு தலையில் கட்டி விடலாம் ஆக குழு போட்டு விட்டால் முடிந்து போய்விட்டது என்று நினைக்கிறார்கள். சரி குழு போட்டீர்கள் 37 குழு போட்டீர்கள் எந்த குழு அறிக்கை கொடுத்து செயல்படுத்தி உள்ளீர்கள் அதுவும் இல்லை.

  Must Read : மாமியார் மருமகள் சண்டை தீரும்.. தங்கம் இரட்டிப்பாகும் - மாந்திரீகம் செய்வதாக கூறி நகைகளுடன் ஓட்டம் பிடித்த ஆசாமி

  ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் வருடத்திற்கு 20,000 கோடி சம்பாதிக்கிறார்கள். ஓராயிரம் ஈராயிரம் இல்லை. 20,000 கோடி ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக நிறுவனத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி திமுகவிற்கு வருகிறது அதனால் தான் மக்களிடத்தில் கருத்து கேட்க வேண்டுமாம்.

  சூதாட்டத்திற்கு கருத்து கேட்ட ஒரே முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற முதலமைச்சர் திரு ஸ்டாலின் என்ற பெருமை பெறுகிறார் அதைத்தான் சொல்ல முடியும் வேறு என்ன சொல்ல முடியும். நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை நாட்டின் மீதும் அக்கறையில்லை. அக்கறை இல்லாத ஒரு முதலமைச்சர் இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பது வேதனை தான் நமக்கு மிச்சம்” இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

  செய்தியாளர் - சந்திரசேகர்.
  Published by:Suresh V
  First published:

  Tags: ADMK, Edappadi Palaniswami, Kanchipuram

  அடுத்த செய்தி