கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பிரிசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் திருமால் தசாவதாரத்தில் ஆமைவடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை-கச்சபேசனை-வணங்கினார்.
அதாவது கச்சபேசர் = கச்சப் + ஈசர் எனப் பிரிக்கலாம். அதன்படி கச்சபம் என்றால் ஆமையைக் குறிக்கும். ஆமைக்கு அருள்புரிந்த ஈசனே கச்சபேஸ்வரர் ஆனார்.
அதாவது திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கியதால் இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள்புரிந்துகொண்டு இருக்கும் கச்சபேசனை கும்பிட வேண்டும் என்று சென்றவர்களும், செல்லவேண்டும் என நினைத்தவர்களும், சென்று கச்சபேசனைக் கண்டவர்களும், யாவரும் இவ்வுலகத்தில் துன்பம் நீங்கி இன்பம் எய்தி, மீளா முக்தியும் அடைவார்கள் என்பது இக்கோயிலின் மகிமை ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதையும் படிங்க : மத்திய ரயில்வே அமைச்சரை திடீரென சந்தித்த காஞ்சி எம்பி - காரணம் என்ன?
இந்த ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குளத்தின் பெயர் "இஷ்டசித்திக் தீர்த்தம்"ஆகும். இக்குளத்தில் முழுகி குளிப்பவர்களுக்குச் சிவபெருமான் திருவருள் பாலிப்பார். இத்தீர்த்தக் குளத்தைக் கண்டவர்களும், தன் உடம்பில் இத்தீர்த்தத்தை தெளித்தக் கொண்டவர்களுக்கும், மூழ்கிக் குளிப்பர்களுக்கு அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு போன்ற உறுதிப் பொருளை அடைவார்கள் என பக்தர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த இஷ்டசித்தி தீர்த்தக் குளத்தில் ஞாயிற்றுக் கிழமை முழுகினால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறந்திடும், மனைவி அமையாதவர்களக்கு நல்மனைவி அமைந்திடும், நோயில் துன்புறும் மக்கள் நோய் தீர்ந்து அவர்களின் ஆயுள் கெட்டிப்படும், கல்வி அறிவைப் பெறுவர் எனவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பொன் பொருள் இல்லாதவர் அனைத்துச் செல்வமும் பெற்றுச் சிறப்புடன் வாழ்வர் மற்றும் பதவி வேலை இல்லாதவர் பணியையும் பெற்று வாழ்வார்கள் என்பது இக்கோயில் திருக்குளத்தின் சிறப்பாக உள்ளது.
மேலும் இத்திருக்கோயிலின் திருக்குளத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் திருக்குளத்தை சுற்றி பல்வேறு கலைநய வேலைபாடுகளுடன் கற்தூண்கள்,கற்களால் ஆன நந்தி பகவானின் சிலை அமைக்கப்பட்டு கோவில் குளமானது ரம்மியமாக காட்சி அளிப்பது வருகை தரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பொதுவாகவே ஆமை செல்லும் இடங்கள் விளங்காது என்பது கிராம பழமொழி ஆனால் இத்திருத்தலத்தில் திருமால் ஆமை வடிவத்தில் வந்து ஈசனை வழிபட்டு சிறப்புற்றதால் இக்கோயில் திருக்குளத்தில் வந்து நீராடி ஈசனை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது தொன்று தொட்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanchipuram, Local News