ஹோம் /நியூஸ் /kanchipuram /

குன்றத்தூர் அருகே மாமுல் தர மறுத்த பல் டாக்டருக்கு அரிவாள் வெட்டு...

குன்றத்தூர் அருகே மாமுல் தர மறுத்த பல் டாக்டருக்கு அரிவாள் வெட்டு...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Kundrathur | குன்றத்தூர் போலீசார் செந்தமிழ் செல்வன் மற்றும் கருணாகரன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்தவர் கௌதம் (26), பல் டாக்டராக உள்ள இவர் திருமுடிவாக்கத்தில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இன்று கௌதம் கிளினிக்கில் இருந்தபோது அங்கு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கஞ்சா கர்ணா (என்ற) கருணாகரன் அவருடன் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியதில் கௌதமின் கை, மற்றும் கழுத்து பகுதி தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதையடுத்து மயங்கினார்.

இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் அங்கிருந்தவர்கள் கௌதமை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ள செந்தமிழ் செல்வன் பல் டாக்டரை மிரட்டி ரூ.50 ஆயிரம் பணம் கேட்டதாகவும் தர மறுத்ததால் அவரது கூட்டாளிகளை அனுப்பி வெட்டியது தெரியவந்தது.

Also see...கொரோனா வைரஸ்... திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முக்கிய அலர்ட்

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் செந்தமிழ் செல்வன் மற்றும் கருணாகரன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். மாமுல் தர மறுத்த பல் டாக்டரை மருத்துவமனையில் புகுந்து வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: சோமசுந்தரனம், பூந்தமல்லி

First published:

Tags: Dental Care, Doctor, Kancheepuram