ஹோம் /நியூஸ் /kanchipuram /

காஞ்சிபுரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் கோயில்... பக்தர்கள் வேதனை...

காஞ்சிபுரத்தில் சிதிலமடைந்து கிடக்கும் கோயில்... பக்தர்கள் வேதனை...

சிதிலமடைந்து கிடக்கும் கோயில்

சிதிலமடைந்து கிடக்கும் கோயில்

Kanchipuram District News : சேதமடைந்து கிடக்கும் காஞ்சிபுரம் சஞ்சீவிராயர் திருக்கோயிலை சீரமைத்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார்குளம் கிராமத்திலுள்ள பழமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற சஞ்சீவிராயர் எனும் ஆஞ்சநேயர் திருக்கோயில் உரிய பராமரிப்பின்றி, சிதிலமடைந்த நிலையில் காணப்படுவது பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே ஐயங்கார்குளம் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற சஞ்சீவிராயர் திருக்கோயில் எனும் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. மேலும் வேறு எங்கும் காண கிடைக்காத வகையில் ஆஞ்சநேயருக்கு தனி புராதன திருக்கோயிலாக விளங்கி வருகிறது.

இத்தகைய சிறப்புகள் உடைய இத்திருக்கோயில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த பழமையான திருக்கோயில் கடந்த 10 ஆண்டுகளாகவே உரிய பராமரிப்பின்றி உள்ளது.

சிதிலமடைந்து கிடக்கும் கோயில்

குறிப்பாக இத்திருக்கோயிலின் முன்புள்ள ராஜகோபுரம் உட்பட கோயிலிலுள்ள அனைத்து கோபுரங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்தும், புதர்மண்டியும், சிதிலமடைந்த நிலையிலே காட்சியளிக்கிறது.

இதையும் படிங்க : ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு.. காஞ்சிபுரத்தில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?

பல ஆண்டுகளாகவே இத்திருக்கோயிலை முறையாக புனரமைப்பு செய்திட வேண்டும் என பக்தர்களும், அக்கிராம மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனாலும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமலேயே உள்ளதால் இக்கோயில் மேலும் மேலும் சிதிலமடைந்து வருகிறது.

இதனால் இக்கோயிலை தரிசிக்க வரும் பக்தர்களும், வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் இக்கோயிலின் நிலையை கண்டு மன வருத்தத்துடனே சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

சிதிலமடைந்து கிடக்கும் கோயில்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, உடனடியாக வரலாற்று சிறப்பிக்க இக்கோயிலை உரிய முறையில் புனரமைத்து தர வேண்டும் என்பதே இக்கிராம மக்கள் மற்றும் பக்தர்களின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News