Home /News /kanchipuram /

ஸ்மிருதி இரானியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் போராட்டம்

ஸ்மிருதி இரானியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அரசியல் நாகரிகம் இன்றி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி விமர்சித்ததாக நாடு முழுவதும் காங்கிரஸார் எதிர்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். மேலும் இந்த போராட்டத்தில் ஸ்மிருதி இரானியின் உருவ பொம்மையும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அரசியல் நாகரிகம் இன்றி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்ததாக நாடு முழுவதும் காங்கிரஸார் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து திருப்பெரும்புதூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அனிஷ் ராஜ்குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. அங்கு ஸ்மிருதி இரானியின் உருவபொம்மையை எரித்து திருப்பெரும்புதூர் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜீவ்காந்தி நினைவகம் முன்பு நடந்த இந்த போராட்டத்தின் போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். அப்போது காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் கட்சி துண்டில் தீப்பற்றியது. உடனடியாக அவர் அந்த தீயை அணைத்தார்.

    இதனை தொடர்ந்து மத்திய அமைச்சருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஸ்மிருதி இரானியின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீதர், கெளதம், விக்னேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் பிரிவு தலைவர் தங்கராஜ், அசோகன், புண்ணியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    ஸ்மிருதி இரானியின் இந்த பேச்சுக்கு இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: BJP, Congress

    அடுத்த செய்தி