Home /News /kanchipuram /

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தை புறக்கணித்த 12 கிராம மக்கள்

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தை புறக்கணித்த 12 கிராம மக்கள்

சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம்

சென்னை பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதலே கிராம மக்கள் காத்திருந்தனர். ஆனால், நண்பகல் 12 மணி வரை அமைச்சர்கள்,  அதிகாரிகள் யாரும் வரவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தை 12 கிராம மக்கள் புறக்கணித்தனர்.

    சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக பரந்தூர், ஏகநாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு  உட்பட 12 கிராமங்களுக்குட்பட்ட நான்காயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. விமான நிலையத்திற்காக குடியிருப்புகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இதற்கு  பரந்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, கிராம மக்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர்   நேற்று குறைகளை கேட்டறிய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதலே கிராம மக்கள் காத்திருந்தனர்.

    ஆனால், நண்பகல் 12 மணி வரை அமைச்சர்கள்,  அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில், கிராமம் வாரியாக கருத்துக் கேட்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.  மேலும், பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினர்.

    இதையும் படிங்க: மைதானத்தில் விளையாடுங்கள் செல்போன் வேண்டாம் - மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அட்வைஸ்

     

    இந்நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ அன்பரசன், எ.வ.வேலு தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.  ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட  ஆட்சியர் ஆர்த்தி, வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், சுந்தர், செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் 12 கிராம பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்றனர்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: Airport, Chennai Airport, Village

    அடுத்த செய்தி