ஹோம் /நியூஸ் /Kanchipuram /

கோடைகாலத்தில் முதன்முறையாக செம்பரம்பாக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோடைகாலத்தில் முதன்முறையாக செம்பரம்பாக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோடைகாலத்தில் முதல்முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதிநீர் வரத்தாலும், இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் உயரம் 23.48 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3509 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 550 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 108 கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும் தற்போது 23.48 அடி இருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு  வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நதி நீரையும் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறுத்தினர். ஏரியின் நீர்மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணி துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் அதிகாரிகள் நிர்ணயித்த அளவை ஏரி நெருங்கியதால் இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

மேலும் இன்று இரவு மழை பெய்யும் என்ற காரணத்தாலும் தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டமாக 500 கனஅடி உபரி நீரை வெளியேற்ற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதன் பேரில் இன்று 12 மணிக்கு செம்பரம்பாக்கம் 5 கண் மதகுகளில் இருந்து இரண்டாவது செட்டர் வழியாக 500 கன அடி நீரை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி  திறந்து வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உபரி நீர் திறப்பதற்கு முன்பாக இந்த பகுதியை சுற்றியுள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பெடு, சிறுகளத்தூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 23 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Chembarambakkam Lake, Chembaramkkam, Heavy rain