சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் 450 முதல் 600 விமானங்கள் வந்து சொல்லும் நிலையில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக சென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்து இருந்தது.
அதன் அடிப்படையில் சென்னைக்கு அருகே 2வது விமான நிலையத்தை அமைக்க முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு மத்திய அரசு உத்திரவிட்டிருந்தது. அதன்படி சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் பகுதியிலும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு பரிசீலனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட, காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பரந்தூர், வளத்தூர், நெல்வாய், தண்டலம், நாகப்பட்டு, பொடவூர், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், O.M.மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலி பாடி, ஏகனாபுரம் ஆகிய 12 கிராமங்களை அடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு செல்வதற்கும், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வந்தடைவதற்கும், பரந்தூர் பகுதி வசதியாக உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைகளும்,1200 தொழிற்சாலைகளும் உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகள் பன்னாட்டு தொழிற்சாலைகளாக இருப்பதால் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் பணியாளர்கள் வந்து செல்வதற்கும் வசதியாக இந்த பன்னாட்டு விமான நிலையம் அமையும் என தெரியவந்துள்ளது.
அத்துடன் விமான நிலையம் அமைந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், வாழ்வாதாரம் உயரும் என்பதால் பெரும்பாலான கிராம மக்கள் விமான நிலையம் அமைக்க வரவேற்பு தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம்
இதில் ஏகனாபுரம் கிராமம் தவிர்த்து பிற கிராமங்களில் ஓரளவு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்பட்ட உள்ளது. ஆனால் ஏகனாபுரத்தில் முழுமையாக அனைத்து பகுதிகளும் அழிவதால் அப்பகுதியில் உள்ள 2000க்கும் மேற்ப்பட்ட மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் மட்டும் புதிய விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.