முகப்பு /செய்தி /kanchipuram / செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று 10 மணிக்கு உபரிநீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்!

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று 10 மணிக்கு உபரிநீர் திறப்பு... வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்!

செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur) | Thiruvallur | Tamil Nadu

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் என அனைத்தும் நிரம்பி வருகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.03 அடியை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக வினாடிக்கு 400 கன அடி நீர்வரத்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து 3 வது நாளாக வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2862 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 100 கனஅடி உபரி நீரானது திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 10 மணியளவில் 500 கன அடியாக உயர்த்தப்பட்டு உபரி நீரானது திறக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க | இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதால் குன்றத்தூர், வலுதலம்பேடு, திருநீர்மலை, திருமுடிவாக்கம், உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

top videos
    First published:

    Tags: Chembarambakkam Lake, Chembaramkkam, Weather News in Tamil