என்னை செல்லமாக சின்னவன் என்றே கூப்பிடுங்க.. சின்னவர் என்றால் பலருக்கு வயிறு எரிகிறது - உதயநிதி ஸ்டாலின்
என்னை செல்லமாக சின்னவன் என்றே கூப்பிடுங்க.. சின்னவர் என்றால் பலருக்கு வயிறு எரிகிறது - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Udhayanithi Stalin : இனிமேல் அதிமுகவை நாம் திட்டவோ, விமர்சிக்கவோ அவசியமே இல்லை,கடந்த சில நாட்களகவே அவர்களுக்குள்ளாகவே அவர்களை திட்டிக்கொண்டு கல் எறிந்துகொள்கிறார்கள் - உதயநிதி ஸ்டாலின்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏவுமான க.சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கலைஞர் திடலில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 2,083 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா 15,000 ரூபாய் பொற்கிழிகளையும், சுமார் 400க்கும் மேற்பட்ட நலிவுற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார்.
திமுக விழா
12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 188 அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும்,கொரோனா தொற்றால் உயிரிழந்த திமுகவினருக்கு நிதியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “என்னை சின்னவன் என்றே கூறுங்கள், உங்களுடைய உழைப்பு அனுபவத்தில் சின்னவன் தான், என்னை செல்லமாக சின்னவன் எண்றே கூப்பிடலாம், என்னை சின்னவரே என்று கூறினால் பல விமர்சனங்கள் எழுகிறது, பல பேர் வயிற்று எரிச்சல் அடைகிறார்கள்,ஆகையால் என்னை நீங்கள் சின்னவன் என்றே கூப்பிடலாம்.
உதயநிதி ஸ்டாலின்
இனிமேல் அதிமுகவை நாம் திட்டவோ, விமர்சிக்கவோ அவசியமே இல்லை,கடந்த சில நாட்களகவே அவர்களுக்குள்ளாகவே அவர்களை திட்டிக்கொண்டு கல் எறிந்துகொள்கிறார்கள், ஏனென்றால் அதிமுகவிற்கு வரலாறு கிடையாது, நமது திமுக இயக்கத்திற்கு வரலாறு இருக்கின்றது,
அந்த வரலாறுக்கு சாட்சியாக திமுக மூத்த முன்னோடிகளாக நீங்கள் உள்ளீர்கள், நீங்கள் இல்லையென்றால் திமுக கிடையாது. எனவே என்னை போன்ற இளைஞர்களை, இந்த சின்னவனை மூத்த முன்னோடிகள் எங்களது கைகளை பிடித்து என்னையும்,என்னை போன்ற இளைஞர்களை நீங்கள் வழி நடத்திட வேண்டும், நீங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள், உங்களது வழிக்காட்டுதலோடு நாங்கள் வழி நடக்கின்றோம்” என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.