Home /News /kanchipuram /

காஞ்சிபுரம் அருகே கஞ்சா போதை இளைஞர்கள் இரவில் செய்யும் அட்டூழியம்...

காஞ்சிபுரம் அருகே கஞ்சா போதை இளைஞர்கள் இரவில் செய்யும் அட்டூழியம்...

சிசிடிவி வீடியோ

சிசிடிவி வீடியோ

Kanchipuram | காஞ்சிபுரம் அருகே இரவில் வலம் வரும் கஞ்சா போதை இளைஞர்கள் நள்ளிரவில் வீட்டில் வெளியே நிற்கும் கார் கண்ணாடிகளை கற்களால் அடித்து நொறுக்குகின்றனர். அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை பகுதியில் உள்ள ராமானுஜர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வைத்து ட்ரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். நேற்று சாகுல் ஹமீத் தனது காரில் சென்னைக்கு வேலைக்காக சென்று இரவு வீடு திரும்பினார். வழக்கம்போல் நேற்று இரவு வீட்டில் முன்னே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

    திடீரென்று அதிகாலையில் 3 மணியளவில் அக்கம் பக்கத்தினர் ஹமிதை தொடர்பு கொண்டு கார் கண்ணாடி முற்றிலுமாக உடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். உடனே வந்து பார்த்ததில் கார் கண்ணாடி முற்றிலுமாக கல்லால் உடைக்கப்பட்டது தெரியவந்தது.

    ஹமீத் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கட்சியை பார்த்த பொழுது நள்ளிரவு 1 மணி அளவில் கஞ்சா போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் பெரிய கற்களால் கார் கண்ணாடியை முற்றிலுமாக உடைத்தது பதிவாகியுள்ளது.

    இதுதொடர்பாக பாலு செட்டி காவல் நிலையத்தில் ஹமீத் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சியை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    Also see... மசினகுடிக்கு வெள்ளப் பெருக்கால் போக்குவரத்து துண்டிப்பு...

    கஞ்சா போதையில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகம் நடைபெற்று வரும் நிலையில் இரவு நேரத்தில் கஞ்சா போதையில் உலா வரும் போதை ஆசாமிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனனர்.

    செய்தியாளர்: சந்திரசேகர், காஞ்சிபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cannabis, Kanchipuram

    அடுத்த செய்தி