Home /News /kanchipuram /

பெண் மீது போலீஸ் எஸ்.ஐ தாக்குதல்.. காவல் நிலையத்தில் பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ

பெண் மீது போலீஸ் எஸ்.ஐ தாக்குதல்.. காவல் நிலையத்தில் பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ

காஞ்சிபுரத்தில் பெண் ஒருவரை உதவி ஆய்வாளர் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்...

காஞ்சிபுரத்தில் பெண் ஒருவரை உதவி ஆய்வாளர் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்...

Kancheepuram | காஞ்சிபுரத்தில் பெண் ஒருவரை, சிறப்பு உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kancheepuram (Kanchipuram), India
    காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமு என்கின்ற சோமசுந்தரம், என்பவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல்துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும், கூறப்படுகிறது. மேலும் காவலர் வீட்டிற்கு சென்று பிரியா அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் காவலராக இருந்து வந்த சோமசுந்தரத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் அவரை, உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் அந்தப் பெண் அடிக்கடி சோமசுந்தரத்திடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் சோமசுந்தரம் பிரியாவின் உறவினரிடம், பிரியாவை பற்றி தவறாக கூறியதாக தெரிகிறது. இதனால் பிரியா சோமசுந்தரத்தின் மீது தொடர்ந்து கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியா, அவரை தேடி பெருநகர் காவல்நிலையத்திற்கு வந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் சண்டை போட்டு உள்ளார்.

    Also see... 4 பெண்கள் கூட்டணி அமைத்து காவல்துறையின் பெயரில் கோடிக்கணக்கில் பலே மோசடி..

    இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் காவல்நிலைய வாசலிலேயே, வைத்து சக காவலர்கள் முன்னிலையில் பிரியாவை தாக்கியுள்ளார். இதனால் காவல் நிலையமே பரபரப்பாக மாறியது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    செய்தியாளர்: சந்திர சேகர், காஞ்சிபுரம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kancheepuram, Viral Videos

    அடுத்த செய்தி