ஹோம் /நியூஸ் /kanchipuram /

40 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் பள்ளியில் படித்த மாணவர்கள்.. 96 பட பாணியில் ரீயூனியன்..

40 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் பள்ளியில் படித்த மாணவர்கள்.. 96 பட பாணியில் ரீயூனியன்..

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Kanchipuram District News : 40 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் பள்ளியில் படித்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் சந்திப்பு.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Kanchipuram, India

காஞ்சிபுரம் மாநகரின் மையப் பகுதியான தலையாரி தெரு பகுதியில் காமு சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு சிறப்பான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை செய்து வருகிறது.

இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1981ம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள நிலையில் அனைவரும் ஒன்று கூடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

முன்னாள் பள்ளி மாணவர்கள் சங்கம் சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த மாணவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும் சந்திப்பு நிகழ்ச்சி இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க : “எங்க வாழ்வாதாரமே இதை நம்பிதான் இருக்கு... காஞ்சிபுரத்தில் கிராம மக்களின் மனக்குமுறல்...

தற்போது பெற்றோர்களாகவும் உள்ள முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரில் வந்து, தங்களுக்கு தரமான கல்வியையும், நல்லொழுக்கத்தையும் கற்பித்த, முதியோர்களாக உள்ள தங்களின் ஆசிரியர்களுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து, தங்க பட்டு வஸ்திரம் வழங்கி கௌரவித்து அவர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்றனர்.

மேலும் படித்த பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தையும் வழங்கினார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

40 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவர்களாக இருந்த முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக நண்பர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்து தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் செய்தியாளர் - கார்த்திக்

First published:

Tags: Kanchipuram, Local News