ஹோம் /நியூஸ் /காஞ்சிபுரம் /

விஜயதசமி: குழந்தைகளை ஆர்வமாக பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்

விஜயதசமி: குழந்தைகளை ஆர்வமாக பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்

குழந்தைகளை அ என எழுத வைக்கும் ஆசிரியர்

குழந்தைகளை அ என எழுத வைக்கும் ஆசிரியர்

Kanchipuram | விஜயதசமி ஒட்டி தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்வமுடன் குழந்தைகளை சேர்க்க தொடங்கியுள்ளனர். ஆசிரியர்கள் மழலையர்களை சரஸ்வதி சிலை முன்பு அமரவைத்து அரிசி தட்டில் 'அ' என எழுதி மழலைகள் எழுதத் தொடங்கி வைத்தனர் | Admission to private schools begins on Vijayadashami.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kanchipuram, India

  ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் தினமான விஜயதசமி நாளன்று பெற்றோர் தங்களது குழந்தைகளை முதல்முதலில் பள்ளிகளுக்கு அனுப்புவது வழக்கம். அன்றைய தினத்தில் இருந்து பள்ளிக்குச் சென்றால் எதிர்காலத்தில் மாணவர் கல்வியில் சிறந்தவராக விளங்குவார் என்பது பலரது நம்பிக்கையாகும்.

  அந்த வகையில் விஜயதசமியான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதல் முதல் பள்ளியில் சேர்த்து முதல் நாள் வருகை பதிவு இடம் செய்து வருகின்றனர்.

  காஞ்சிபுரம் தனியார் பள்ளிகளில் ஆர்வமுடன் காலையிலிருந்து  பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர் . லேசான சாரல் மழை பெய்தும் அதனை பொருட்படுத்தாமல் பெற்றோர்கள் குழந்தைகள் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனியார் பள்ளியில் மழலைகளை சேர்க்கை முடிந்தவுடன் பள்ளியில் இருக்கும் சரஸ்வதி சிலையின் முன்பு அமர வைத்து பள்ளி ஆசிரியர் அரிசி தட்டில் உயிர் எழுத்துக்களின் முதன்மை எழுத்துக்களான ' அ ' மற்றும் ஓம் என எழுத வைத்து எழுத்து பயிற்சி தொடங்கினர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kanchipuram, School, Vijayadashami holiday